சீர்மரபினர் பிரிவிலுள்ள 68 சாதிகளுக்கு இரட்டைச் சான்றிதழுக்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

சீர்மரபினர் பிரிவிலுள்ள 68 சாதிகளுக்கு டிஎன்சி, டிஎன்டி என வழங்கப்படும் இரட்டைச் சான்றிதழ் முறையை நீக்கி, டிஎன்டி என்ற ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முத்தரையர் கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் திருச்சி பிரஸ் கிளப்பில் நேற்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான எஸ்.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:

முத்தரையர்களைப் பூர்வீகப் பழங்குடியினராக அறிவித்த மத்திய அரசுக்கும், சாதிவாரியான புள்ளி விவரங்களைச் சேகரிக்கத் தனி ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கும் நன்றி. தமிழக மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் உள்ள முத்தரையர்களுக்கு 33 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பாளர்களாகப் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும். முத்தரையர் சமுதாயத்தினரை அதிகளவில் வேட்பாளர்களாக அறிவிக்கும் கட்சிக்கே ஆதரவு அளிக்கப்படும். சீர்மரபினர் பிரிவிலுள்ள 68 சாதிகளுக்கு டிஎன்சி, டிஎன்டி என வழங்கப்படும் இரட்டைச் சான்றிதழ் முறையை நீக்கி, டிஎன்டி என்ற ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும்.

தேசிய சீர்மரபினர் ஆணையப் பரிந்துரையின்படி சட்டப்பேரவை, மக்களவை மற்றும் உள்ளாட்சிப் பதவிகளில் சீர்மரபினர் பழங்குடியினர்களுக்கு தனி தொகுதி ஒதுக்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் செல்வகுமார், எழுச்சி தமிழர் முன்னேற்ற சங்க நிறுவனர் வெள்ளத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்