மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் திருநெல் வேலி வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீஸார் கலைக்க முயன்றபோது, தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
எட்டயபுரம்
எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பேருந்து நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கனகராஜ், மார்க்சிஸ்ட் வட்டச் செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தனர். போராட்டத்தில் பங்கேற்ற 36 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் பழைய பேருந்து நிலையம் அருகே அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் வி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்டத் தலைவர் மணி, முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.நாகர்கோவில்
நாகர்கோவிலில் வடசேரி உழவர் சந்தை முன்பிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்று, தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர். அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் செல்லசுவாமி தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினர் நூர்முகமது உட்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago