விஏஓ வீட்டை உடைத்து ரூ.7 லட்சம் பணம் திருட்டு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (45). இவர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கவுண்டனூரில் சங்கருக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன. விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கரின் தாயார் ஒரு வீட்டை பூட்டிவிட்டு, அதன் அருகே உள்ள மற்றொரு வீட்டில் உறங்கச் சென்றார். இரவில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.7 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சங்கர், மத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர். போலீஸார் கூறும்போது, விஏஓ சங்கர் நிலம் வாங்குவதற்காக ரூ.7 லட்சம் ரொக்கம் வீட்டில் வைத்திருந்ததாக கூறியுள்ளார். அவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்,’’ என்றனர்.

சங்கர் வீட்டின் அருகே வசிக்கும் கட்டிட மேஸ்திரி முருகன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 2 பவுன் தங்க நகைகள் மற்றும் மாது என்பவரது வீட்டில் ரூ.6 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றையும் திருடிச் சென்றனர். இது தொடர்பாக மத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்