விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு மேற் கொண்டார்.
விழுப்புரம் நகர் பகுதியில் புதிய பேருந்து நிலையத் தில் தேங்கியிருக்கும் மழைநீரை பார்வையிட்டு, நீர் வடிய நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு நடவடிக்கைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர், செஞ்சி பி ஏரி, வீடூர் அணை ஆகிய இடங்களில் நடைபெறும் பணி களை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மேலும் செஞ்சி அருகே ரெட்டிப்பாளையம் - தென்பாலை இடையேயான வராகநதி தரைப்பாளத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க ஆட்சியர் உத்தரவிட்டார். எஸ்பி ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அறவாழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago