தொடர் மழையால் தேவராயநேரியில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழைநீர்

By செய்திப்பிரிவு

திருச்சியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தேவராயநேரி பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

‘புரெவி’ புயல் காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் 4-ம் தேதி காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 1,170 மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நந்தியாறு தலைப்பில் 120.8 மிமீ மழை பதிவாகியது. இதற்கடுத்து, கல்லக்குடியில் 83.4 மிமீ, புள்ளம்பாடியில் 79.8 மிமீ, சமயபுரத்தில் 77.6 மிமீ, துவாக்குடியில் 74 மிமீ, திருச்சி நகரில் 65 மிமீ, பொன்னணியாறு அணையில் 62.6 மிமீ மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

லால்குடி 54.2, மருங்காபுரி 51.4, துறையூர் 51, திருச்சி ஜங்ஷன் 48.2, பொன்மலை 39.8, விமான நிலையம் 39.5, நவலூர் குட்டப்பட்டு 36, மணப்பாறை 35.4, தேவிமங்கலம் 34, சிறுகுடி 33, தாத்தையங்கார்பேட்டை 32, கோவில்பட்டி 31.4, வாத்தலை அணைக்கட்டு 31, முசிறி 27.4, கொப்பம்பட்டி 22, தென்பரநாடு 21, புலிவலம் 20.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் திருச்சிமாவட்ட நீதிமன்ற வளாகம், அதற்கு பின்புறம் உள்ள மாவட்ட வன அலுவலகம், கருவூலம் ஆகிய அலுவலகங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அங்கு சென்று வருவதற்கு பொதுமக்கள், அலுவ லர்கள் சிரமத்துக்குள்ளாயினர்.

இதேபோல, திருச்சி தேவராயநேரி பகுதியில் 2 தெருக்களில் உள்ள 200 வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் அந்த வீடுகளில் வசிக்கும் குழந்தைகள், பெண்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். தகவலறிந்த வருவாய்த் துறை யினர் விரைந்து சென்று பார்வை யிட்டு, மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்