ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை யொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர் களுடன் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில் ஆட்சியர் சு. சிவராசு பேசியது: ரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.14-ம் தேதி தொடங்கி ஜன.4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சொர்க்கவாசல் திறப்பு டிச.25-ம் தேதி அதிகாலை நடைபெற வுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி விழாவை நடத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன.
திருச்சி மாநகராட்சி சார்பில் ரங்கம் பேருந்துகள் நிற்குமி டத்தில் பொதுமக்கள் பேருந்து களில் வசதியாக ஏறவும், இறங்கவும் தடுப்புகள் அமைக்கப்பட வேண் டும். கோயில் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் ரங்கம் முழுவதும் சுகா தார ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். விழாக் காலம் முடியும் வரை போதிய அளவு குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்ய வேண்டும்.
அம்மாமண்டபம், கொள்ளிடம் படித்துறைகளில் கூடுதல் மின்விளக் குகள் அமைக்கவும், பொது மக்கள் தங்குவதற்கு மாநகராட்சி பள்ளிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். தடையற்ற மின்சாரம் வழங்க மின்துறையினர் தயாராக இருக்க வேண்டும்.
இதேபோல, தீயணைப்புத் துறை சார்பில் தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
டிச.24 முதல் 26-ம் தேதி வரை பொதுமக்களின் அவசர தேவைக்கு 24 மணி நேரமும் இலவச மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். காவல்துறையினர் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். அன்னதானம், உணவகங்களில் தரமான உணவு வழங்குவதை உணவுப் பாதுகாப்புத்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந் திருக்க வேண்டும். நோய் அறிகுறி கள் இல்லாத பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி பெரு விழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் து.லோகநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், ரங்கம் சார் ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago