தென்காசி வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) நல்லமுத்துராஜா அறிக்கை:
தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்வது நல்லது. குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை 4-ம் ஆண்டில் இருந்தும், நெட்டை மரங்களை 7-ம் ஆண்டில் இருந்து 60-ம் ஆண்டு வரையிலும் காப்பீடு செய்யலாம். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய நல்ல ஆரோக்கியமான மரங்களை இத்திட்டத்தில் சேர்க்கலாம்.
ஏக்கருக்கு சுமார் 175 தென்னை மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய முடியும். 4 அல்லது 7 வயது முதல் 15 வயது வரை உள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.2.25, 16 வயது முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50 காப்பீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும். காப்பீட்டு கட்டணத்துக்கான வரைவோலை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட், சென்னை என்ற நிறுவனத்தின் பெயரில் எடுக்க வேண்டும்.
காப்பீடு செய்வதற்கு முன்மொழிவு படிவத்துடன் ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் அடங்கல், புல எண் வரைபடம், விவசாயியின் புகைப்படம், வட்டார வேளாண் உதவி இயக்குநரின் காப்பீட்டு திட்டத்துக்கான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், காப்பீட்டு கட்டணத்துக்கான வரைவோலை ஆகியவற்றை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago