வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.5.77 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.5.77 கோடி மதிப்பிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று திறந்து வைத்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வருவாய் கோட்டாட்சியர் கணேஷ், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த கட்டிடத்தில் 9,320 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், 5,040 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள், 4,924 விவிபாட் கருவிகளை பாதுகாப்பாக வைக்க முடியும். இங்கு, 16 கண்காணிப்பு கேமரா வசதியுடன் கீழ் தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு லிப்ட் வசதியுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து சென்று வர முடியும்.
இதனைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் கருவிகள் முதல் நிலை சரிபார்ப்புப் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்தப் பணிகள் அடுத்த 15 நாட்கள் வரை நடைபெறும் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago