தி.மலை அருகே மீசநல்லூர் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் 100 இருளர் குடும்பங்களுக்கு குடியிருப்பு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பகுதியில் சமுதாய கூடம், அங்கன்வாடி மையம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடம், திறந்தவெளி கிணறு, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, குழந்தைகள் பூங்கா இடம்பெற்றுள்ளன. மேலும், இருளர்களின் வாழ்வாதாரத்துக்காக செங்கல் மற்றும் கரி சூளை, மாட்டுத் தொழுவம், காகிதப் பைகள் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனம், தீவன புல் வளர்க்கும் தோட்டம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், இருளர் சமூக மக்கள் கட்டும் கன்னியம்மன் கோயிலின் பூமி பூஜையில் பங்கேற்றார். இதை யடுத்து, அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரம் குறித்து இருளர் மக்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago