சி.எம்.சி காலனி மக்களுக்காக உக்கடம் புல்லுக்காட்டில் தற்காலிக வீடுகள்

By செய்திப்பிரிவு

கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இறங்கு தளம் செல்வபுரம் பைபாஸ் சாலையில் வருகிறது. இந்தப் பகுதியில் சி.எம்.சி காலனி குடியிருப்புகள் உள்ளன. இதற்காக 734 வீடுகளை காலி செய்து, ஏறத்தாழ 290 பேருக்கு மாற்று இடங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. மீதம் உள்ள 430 பேருக்கு வீடுகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை.

மேம்பாலப் பணி தீவிரமடைந் துள்ளதால், தற்காலிகமாக உக்கடம் புல்லுக்காடு சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கரில் தற்காலிக வீடுகள் கட்டி, முதல்கட்டமாக 250 பேருக்குவழங்க மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். ஆனால், புல்லுக்காடு சாலையில் தற்காலிக குடியிருப்புகள் அமைக்க, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு விளையாட்டு மைதானம்தான் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், போலீஸார் பாதுகாப்புடன், தற்காலிக வீடுகளை கட்டும் பணி நேற்று தொடங்கியது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘புல்லுக்காடு சாலையில் மொத்த முள்ள 4 ஏக்கரில் ஓர் ஏக்கர் விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்படும்.

மீதமுள்ள 3 ஏக்கரில் தான் தற்காலிக வீடுகள் கட்டப் படும். மேம்பாலப் பணிகள் தீவிரமடைந் துள்ளதால், தற்காலிக வீடுகளை விரைவில் கட்டி, சி.எம்.சி காலனி குடியிருப்புகளை இங்கு மாற்ற வேண்டியது அவசியம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்