விடிய,விடிய கன மழை குறிஞ்சிப்பாடியில் வீடுகளில் மழைநீர் புகுந்தது

By செய்திப்பிரிவு

வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் விடிய,விடிய கன மழை பெய்தது. கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. வாய்க்கால்கள்,ஆறு உள்ளிட்டவைகளில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை தண்ணீர் புகுந்தது.

நேற்றைய மழையளவு(மில்லிமீட்டரில்): காட்டுமன்னார்கோவில் 74, பரங்கிப்பேட்டை 67, கடலூர் 65.6, அண்ணாமலைநகர் 65.2, புவனகிரி 56, குறிஞ்சிப்பாடி 51, லால்பேட்டை 50, சேத்தியாத்தோப்பு 49.6, சிதம்பரம் 46.6, பண்ருட்டி 45, ஸ்ரீமுஷ்ணம் 41.1 ,விருத்தாசலம் 36 மில்லிமீட்டர் மழை பெய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்