‘இந்து தமிழ்' செய்தி எதிரொலியாக குறிஞ்சிப்பாடி பகுதி நெல்வயலில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
குறிஞ்சிப்பாடி வட்டப்பகுதிக்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி வடக்கு, குறிஞ்சிப்பாடி தெற்கு, கல்குணம், ரெட்டியார்பாளையம்,பூதம்பாடி, மேலப்புதுப்பேட்டை, வரதராஜன் பேட்டை உள்ளிட்ட 10 கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பருவ நெல் சாகுபடி நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு மூலம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது பயிர் வளர்ந்து செழித்துள்ள நிலையில் சில வயலில் மர்ம நோய் தாக்குதல் உள்ளது. இது தொடர்ந்து அடுத்தடுத்த வயலுக்கு பரவும் நிலை உள்ளது. இது என்ன நோய் என்பது தெரியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளதாக நேற்று (நவ.3) நமது ‘இந்து தமிழ்திசை'யில் செய்தி வெளியிடப் பட்டது. இந்த நிலையில் நேற்று காலை விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ராம், நடராஜன்,மருதாச்சலம் மற்றும் குறிஞ்சிப்பாடி வேளாண் அலுவலர்கள் அனுசூயா, வெங்கடேசன், உதவி வேளாண் அலுவலர்கள் அசோக்குமார், செந்தில்குமார் ஆகியோரை கொண்ட குழுவினர் மழையையும் பொருட்படுத்தாமல் மர்ம நோய் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் என்ன மருந்து அடிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளையும் விவசாயிகளுக்கு வழங்கி ஆலோசனை கூறினர்.விவசாயிகள் குப்புசாமி, ராஜராஜன், வைத்தி யநாதன் மற்றும் முன்னோடி விவசாயிகள், உழவர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago