நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.15.76 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடக்க விழா மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் முன்னிலை வகித்தார்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதன்படி ரூ.13.80 கோடி மதிப்பில் நாமக்கல் - திருச்சி சாலையில் 2 கி.மீ., தொலைவிற்கு இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதுபோல் ஆவல்நாய்க்கன் பட்டியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதியதாக கால்நடை மருந்தக கட்டிடம் கட்டும் பணி, ரூ.15.76 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். புதுச்சத்திரம் அருகே எஸ்.நாட்டாமங்கலம் ஊராட்சியில் கால்நடை கிளை நிலையத்தை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்துப் பேசினார்.
விழாவில், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், நெடுஞ் சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சந்திரசேகரன், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.பி.எஸ். சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago