மதுரை வைகை ஆற்றில் ரசாயனக் கழிவால் நுரை ஏற்பட்டதாகக் கூறுவது பொய்யான தகவல் என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், பவானியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா படிப்படியாகக் குறைந்து வருகிறது. புயலின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், வீட்டை விட்டு வெளியில் வராமல் அரசியல் செய்து வருகிறார்.
ஆனால், தமிழக முதல்வர் உயிரைப் பற்றி கவலைப்படாமல், மாவட்டம் தோறும் சென்று நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். வைகை ஆற்றில் ரசாயனக் கழிவால் நுரை வருவதாகக் கூறப்படுவது பொய்யான தகவல். மதுரையில் சாயம் தொடர்பான தொழிற்சாலைகள் இல்லாத நிலையில், மழையின் முதல் நீர், கழிவுகளுடன் சேர்ந்து நுரையாகியுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago