சோழசிராமணி காவிரிப் பாலத்தை ஒட்டியுள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே சோழசிராமணி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைப் பாலம் உள்ளது. பாலத்தின் வழியாக இரு மாவட்ட மக்கள் பயணிக்கின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்னர் பாலத்தின் தொடக்கப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. உடனடியாக மண் சரிவு சீரமைக்கப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டது. எனினும், மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் குண்டும், குழியுமாக உள்ள மண் சாலையில் இரு மாவட்ட வாகனங்களும் குதித்து செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறுவதால் அப்பகுதியை வாகன ஓட்டிகள் கடப்பதில் பெரும் சிரமம் நிலவி வருகிறது.
இப்பகுதி ஈரோடு மாவட்ட எல்லையான பாசூரில் உள்ளதால், வாகன ஓட்டிகளின் நலன் கருதி மண் சாலையை விரைந்து தார்சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago