திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று நடைபயணம் தொடங்கிய மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்றுநர்கள் 115 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தினர் திருச்சியில் டிச.3-ம் தேதி தொடங்கி, தினமும் 30 கிமீ வீதம் நடைபயணம் மேற்கொண்டு டிச.14-ல் சென்னை தலைமைச் செயலகத்தை அடைந்து, முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்திருந்தனர்.
இதன்படி, சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.சேதுராமன் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகம் அருகே 100-க்கும் அதிகமானோர் நேற்று திரண்டிருந்தனர். பெண் விடுதலைக் கட்சியின் நிறுவனர் தலைவர் அ.சபரிமாலா, நடைபயணத்தைத் தொடங்கிவைத்தார். ஆனால், போலீஸார் நடைபயணம் செல்ல தடை விதித்தனர். தொடர்ந்து, நடைபயணம் செல்ல முயன்ற சங்க நிர்வாகிகள் சு.சேதுராமன், செ.காணிராஜா, கு.கணபதி, யோ.ராஜேஷ், து.வைரவேலன், க.சிவராமன், அ.டான்போஸ்கோ, அ.வாணி மற்றும் 88 பெண்கள் உட்பட 115 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago