தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளில் மரக்கன்றுகள் வளர்க்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தலா 50 மரக்கன்றுகள் நட்டு சிறப்பாக பராமரித்த 10 பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் கருப்புசாமி தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் விஜயலெட்சுமி வரவேற்று பேசினார். ஆட்சியர் சமீரன் ஊக்கத்தொகை வழங்கினார்.
இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி, ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளி, கீழப்புலியூர் புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளி, பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, தென்காசி ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கீழப்புலியூர் வீரமாமுனிவர் மேல்நிலைப் பள்ளி, நெல்கட்டும்செவல் மாவீரன் பூலித்தேவன் அரசு மேல்நிலைப் பள்ளி, ஏஜி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டு, காசோலைகளை பெற்றுக் கொண்டனர். வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், சமூக ஆர்வலர் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago