திருவண்ணாமலை மாவட்டத்தில்5 நாட்களுக்கு பொன்முடி பிரச்சாரம் எ.வ.வேலு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி 5 நாட்களுக்கு பிரச்சார பயணம் செய்ய உள்ளார் என மாவட்ட திமுக செயலாளர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்தின் அடிப்படையில் தி.மலை மாவட்டத்தில் வரும் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பிரச்சார பயணம் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை திருவூடல் வீதியில் உள்ள திருமண மண்படம் ஒன்றில், வணிகர்களுடன் கலைந் துரையாடல் நிகழ்ச்சியுடன் பிரச்சார பயணம் தொடங்குகிறது. திருவண்ணாமலையில் 5-ம் தேதியும், கீழ்பென்னாத்தூரில் 6-ம் தேதியும், செங்கத்தில் 7-ம் தேதியும், ஆரணியில் 8-ம் தேதியும், செய்யாறில் 10-ம் தேதியும் பிரச்சார பயணம் நடைபெற உள்ளது.

இதில், வணிகர்கள், விவசாயிகள், மாணவர்கள், பாய் தயாரிப்பவர்கள், நெசவாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பழங்குடியின மக்கள், பால் உற்பத்தியாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களுடன் திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி கலைந்துரையாடுகிறார். முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்