புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டிச.11-ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டிச.11-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டி யன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற அந்த அமைப்பின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: டெல்லியில் போராடும் விவசாயிகளின் உயிருக்கும், உடைமைகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் மோடிதான் பொறுப்பு. இந்தச் சட்டத்தால் விளைநிலங் களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒட்டு மொத்த விவசாயமும், இயற்கை வளங்களும் கடுமையாக பாதிக்கப் படும்.

நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டத்தை அதிமுக ஆதரித்தது தமிழர்களுக்கு செய்த துரோகம். எனவே, புதிய வேளாண் சட்டத்துக்கு அளித்த ஆதரவை அதிமுக திரும்பப் பெற வேண்டும். இந்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும். புதிய வேளாண் சட்டங்களைத் திரும் பப் பெற வலியுறுத்தி, டிச.11-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத் தில், அமைப்பின் திருச்சி மண்டலத் தலைவராக பி.ஹேமநாதன், செயலாளராக வி.எம்.பாரூக், மாவட்டத் தலைவராக எஸ்.கஜராஜன், செயலாளராக ஆறுமுகம், துணைத் தலைவராக செல்வம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக கொடைக்கானல் செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேகேதாட்டு அணை கட்டுமானப் பணியை நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்