திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம், கடுமையாக ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறைகளில் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் இலவச வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, முக்கூடல் ஆகிய இடங்களில் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் செல்வசு ந்தரி, செயலாளர் குமாரசாமி, பொருளாளர் நம்பிராஜன், நிர்வாகி தியாகராஜன் தலைமையில் பலர் பங்கேற்றனர். போராட்டம் நடத்திய 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.முருகன் தலைமை வகித்தார். சிஐடியூ கன்வீனர் எம்.முருகன் தொடங்கி வைத்தார். 12 பெண்கள் உள்ளிட்ட 47 பேரை சிப்காட் போலீஸார் கைது செய்தனர்.இதுபோல், திருச்செந்தூரில் 26, வைகுண்டத்தில் 91, கோவில்பட்டியில் 70, கழுகு மலையில் 74, விளாத்திகுளத்தில் 38 பேர் என மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் 152 பெண்கள் உள்ளிட்ட 346 பேர் கைது செய்யப் பட்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எம்.சக்கரையப்பன் தலைமை வகித்தார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago