தாமிரபரணி ஆற்றில் தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வு

By செய்திப்பிரிவு

‘புரெவி’ புயல் எச்சரிக்கையை அடுத்து திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கள ஆய்வு செய்தனர்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பகல் முழுக்க வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சாரல் மழையும் அவ்வப்போது பெய்தது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ள திருநெல்வேலி கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் பகுதி, சிந்துபூந்துறை, கைலாசபுரம், சீவலப்பேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்