‘நிவர்’ புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை யால் மாவட்டத்தில் உள்ள 22 ஏரி கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான ‘நிவர்’ புயல் கடந்த மாதம் 25-ம் தேதி கரையை கடக்கும்போது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் 25-ம் தேதி இரவு தொடங்கி 26-ம் தேதி மாலை வரை மழை நீடித்தது. இதனால், வேலூர் மாவட்டத்தையொட்டியுள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பாலாற்றின் கிளை ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்தது.
இதுமட்டுமின்றி வேலூர் மாவட் டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலை கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில், கடந்த வாரம் ‘நிவர்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஏரிகள் 100 சதவீதம் முழுமையாக நிரம்பி யுள்ளன. அதேபோல 95 சதவீதத் தில் 2 ஏரிகளும், 90 சதவீதத்தில் ஒரு ஏரியும், 50 சதவீதத்தில் 5 ஏரிகளும் நிரம்பியுள்ளன. இதில், காட்பாடி வட்டத்தில் மட்டும் 19 ஏரிகள் நிரம்பியுள்ளன" என தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஏரிகள் 100 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளன. அதேபோல 95 சதவீதத்தில் 2 ஏரிகளும், 90 சதவீதத்தில் ஒரு ஏரியும் நிரம்பியுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago