கரூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவை சேர்ந்தவர்களின் பெயர் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திமுக கரூர் மாவட்ட பொறுப்பாள ரும் எம்எல்ஏவுமான வி.செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியது:

கரூர் மாவட்டத்தில் உள்ள 1,032 வாக்குச்சாவடிகளில் அதிமுகவினர் தங்கள் ஆதரவாளர்கள், குடும்ப உறவு முறையினர் பெயர்களை வாக் காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழியிடம் ஏற்கெனவே 2 புகார்கள் அளித் துள்ளோம்.

இந்நிலையில், கரூர் தொகுதி யில் 10-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் 2, 2-க்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளன. இதில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவரின் பெயர் 2 இடங்களில் உள்ள நிலையில், 3-வதாக ஒரு இடத்தில் பெயரின் ஒரு பகுதியை மட்டும் கொடுத்து சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 4-வதாக ஒரு இடத்தில் பெயரைச் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நபரின் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அட்டையும் பலர் வைத்துள்ளனர். 2 இடங்களில் பெயர் இருந்தால் அவற்றில் ஒன்றை வாக்குச்சாவடி அலுவலர் நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யப்படவில்லை. இதுகுறித்து இன்று ஆட்சியரிடம் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. வாக் காளர் பட்டியலில் உள்ள குளறுப் படி, அத்துமீறல், முறைகேடு தொடர்பாக விரைவில் நீதிமன் றத்தை நாட உள்ளோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்