திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பணம் வைத்து விளையாடப் படும் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகள் தடை செய்யப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்ததை அடுத்து, 1930-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்ட சட்டம், 1888- ஆண்டு, சென்னை நகரக்காவல் சட்டம் மற்றும் 1859-ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றுக்கு உரிய திருத்தங்கள் செய்து, ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, 21.11.2020 -ம் நாளிட்ட அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, இனிவரும் காலங் களில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுபவரும், இவ்விளையாட்டை நடத்து வோரும் கைது செய்யப்படுவர். கணினிகள் மற்றும் கருவிகளும் பறிமுதல் செய்யப்படும். எனவே, பணம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago