நெற் பயிருக்கு காப்பீடு செய்ய டிச.15 கடைசி

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.கஜேந்திர பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வதற்கு அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்த திட்டத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது. நிகழாண்டில் மாவட்டத்தில் பிசான பருவ நெற்பயிருக்கு 320 வருவாய் கிராமங் கள் அறிவிக்கை செய்யப்பட்டு ள்ளன. கடன்பெறும் விவசாயி கள் அந்தந்த வங்கிகளில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு பிரிமியம் செலுத்த டிசம்பர் 15-ம் தேதி கடைசி நாளாகும். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.444 காப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் இத்திட்டத் தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத் துடன் பதிவு கட்டணத்தை கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் மற்றும் சிட்டா, பட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் இணைத்து செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்