கனமழை எச்சரிக்கையால் முன்னேற்பாடுகள் இளைஞர்கள் மூலம் 364 முதல்நிலைக் குழு அமைப்பு தென்காசி ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன், தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் ஆகியோர் கனமழையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். தென்காசி, குற்றாலம், செங் கோட்டை, கடையநல்லூர் உள் ளிட்ட பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால் முன்னேற்பாடுகள் செய்வது குறித்து தமிழக தலைமைச் செயலாளரும், முதல்வரும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகள், கடந்த காலங்களில் கன மழையின்போது வெள்ளம் ஏற்பட்ட பகுதிகள் என, 34 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் நேரத்தில் பணியாற்ற அனைத்து துறையினரை உள்ளடக்கிய மண்டல அளவிலான 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய 364 முதல்நிலை அலுவலர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்