சென்னையில் இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத் தில் பங்கேற்க சென்ற பாமக வினரை தடுத்து நிறுத்தியதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர் 771-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசின் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் பாமக சார்பில் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங் களில் இருந்து பாமகவினர் வாகனங்களில் நேற்று அதிகாலை முதல் சென்றனர். அவர்களை, சென்னைக்கு செல்ல விடாமல் தடுக்க முக்கிய தேசிய நெடுஞ்சாலை களில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி, வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங் களில் சென்ற பாமகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, காவல் துறையினர் கைது செய்தனர். பள்ளி கொண்டா, குடியாத்தம், திரு வலம், மேல்பட்டி உள்ளிட்ட பகுதிகள் என மாவட்டம் முழுவதும் 350-க்கும் மேற் பட்ட பாமகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதேபோல், ராணிப் பேட்டை மாவட்டத்தில் வாலாஜா சுங்கச்சாவடி, ஆற்காடு, அவலூர்பேட்டை எல்லையில் காவல் துறையி னர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வாலாஜா சுங்கச்சாவடி வழியாக சென்ற பாமகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஏராளமான வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மறியலை கைவிட மறுத்த தால் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப் பட்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட பாமக சார்பில் ஆம்பூர் நகரச் செயலாளர் ஹரிஹரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தனி வாகனம் மூலம் சென்னை செல்ல முயன்றனர். அப்போது, மாதனூர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட் டிருந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் மற்றும் காவல் துறையினர் சென்னை போராட்டத்தில் பங்கேற்க சென்ற பாமக நிர்வாகிகள் 2 பெண்கள் உட்பட 21 பேரை கைது செய்தனர்.இதைத்தொடர்ந்து, மாவட்ட எல்லைப்பகுதியில் காவல் துறையினர் நேற்றுதொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago