காவேரிப்பட்டு பால் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் உறுப்பினர்கள் புகார்

By செய்திப்பிரிவு

காவேரிப்பட்டு பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரின் முறைகேடுகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரி டம் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நேற்று மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் காவேரிப்பட்டு பால் கூட் டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள், மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அம் மனுவில் அவர்கள் கூறியிருப் பதாவது:

காவேரிப்பட்டு பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வரும் கோபு என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் பால் கேன்கள் வாங்கியதில் முறைகேடு செய்து சங்க நிதியில் இருந்து ரூ.42 ஆயிரத்தை கையாடல் செய்துள்ளார். அதேபோல, கடந்த ஜனவரி மாதம் முதல் உள்ளூரில் பால் விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.3 லட்சத்தை சங்க வங்கிக் கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார். இதற்கு, சங்கச் செயலாளரும் உடந்தையாக இருந்துள்ளது கூட்டுறவு சரக முதுநிலை ஆய்வாளர் விசா ரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை சங்கத்தின் நிகர லாபத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக லிட்டருக்கு 0.50 பைசா வழங்குவதாக கூறினார். ஆனால், 0.30 பைசா மட்டுமே வழங்கப்பட்டது. இது தொடர்பாக நிர்வாக குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, கூட்டுறவு பால் சங்கம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவித்தார்.

இதேபோல, கறவை பசு வாங்கிக் கொடுத்த கடனுக்கான தவணைத் தொகையையும் கையா டல் செய்துள்ளனர்.இது போன்ற தவறுகளை கண்டறிந்து கேள்வி எழுப்பியவர்களை தலைவர் கோபு மிரட்டியுள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

காவேரிப்பட்டு பால் கூட்டுறவு சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளை தனி அலுவலர் மூலம் தணிக்கை செய்து, சங்கத்துக்கான பணம் எவ்வளவு கையாடல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் கண்டறிய வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டு வரும் தலைவர் மற்றும் செயலாளர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், இது தொடர்பாக விசாரணை நடத்த கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்