பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதியில்நெல் கொள்முதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

பிராமண பெரிய அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டுமென ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட உழவன் மகன் விவசாயிகள் சங்க செயலாளர் மணிகண்டன் கூறியதாவது:

காலிங்கராயன் பாசனத்துக்கு உட்பட்ட அணை நாசுவம்பாளையம், பிராமண பெரிய அக்ரஹாரம், நஞ்சை தளவாய்ப்பாளையம், வைராபாளையம், சூரியம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 450 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் நெல் அறுவடை தொடங்கியுள்ளது.அறுவடை செய்யப்பட்ட நெல்லினை பாதுகாப்பதில் விவசாயிகளுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனவே, பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதியில் நெல் கொள்முதல் மையத்தை விரைவாக அமைத்திட வேண்டும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்