டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மனு

By செய்திப்பிரிவு

மொடக்குறிச்சி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மொடக்குறிச்சியைச் சேர்ந்த பெண்கள் அளித்த மனு விவரம்:

மொடக்குறிச்சி பகுதிக் குட்பட்ட திருமங்கலம், சின்ன குளம், வெள்ளியம் பாளையம், பள்ளியூத்து, ராசாம்பாளையம், ராட்டை சுற்றிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்களது குடியிருப்புகளுக்கு அருகே, ஈரோடு - பழநி சாலையில் விவசாய நிலத்திற்கு அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

குரங்கன் ஓடையைத் தடுத்து இந்த டாஸ்மாக் கடைக்கு செல்ல விதிகளுக்கு மாறாக பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு மது அருந்த வருவோரால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடை வளாகத்தில் உள்ள கிணற்றில் இதுவரை 4 பேர் தவறி விழுந்துள்ளனர். இப்பகுதியில் அமைந்துள்ள பைரவர் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள், டாஸ்மாக் கடையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென, பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய உத்தரவு பிறப்பித்து டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்