அரியலூரை அடுத்துள்ள கயர்லா பாத் கிராமத்தில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலைக்கு ஆனந்த வாடி கிராமத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க கடந்த 1982-ம் ஆண்டு 161 விவசாயிகளிடமிருந்து 270 ஏக்கர் நிலத்தை ஆலை நிர்வாகம் கையகப்படுத்தியது. அப்போது, நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி அடிப்படையில் வேலை வழங்கப்படும் என ஆலை நிர்வாகம் உறுதியளித்தது.
பொதுமக்களின் போராட்டத் துக்கு பிறகு கடந்த ஆண்டு 57 பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆலை நிர்வாகம் வேலை வழங்கியது.
இந்நிலையில், மீதியுள்ளோர் உட்பட அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், சுரங்க நிர்வாகத்தின் சீர்கேட்டைக் கண்டித்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கம் முன்பு ஆனந்தவாடி கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலா ளரும், திரைப்பட இயக்குநருமான கவுதமன் தலைமை வகித்தார். தகவலறிந்து வந்த உடையார் பாளையம் கோட்டாட்சியர் பூங் கோதை, செந்துறை வட்டாட் சியர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரு டன் கவுதமன் செல்போனில் பேசினார். பின்னர், “அடுத்த வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்” என அமைச்சர் தெரிவித்ததாக கவுதமன் கூறிய தையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago