பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

திருச்சியில் பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகளாக தேர்ந் தெடுக்கப்பட்ட பாரதீய டாஸ்மாக் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.கே.டி.சுரேஷ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் நாகராஜ், பொருளாளர் வி.கருப் பண்ணன், செயல் தலைவர் எம்.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாரதீய மஸ்தூர் சங்க மாநிலச் செயலாளர் தங்கராசு பேசியபோது, “அரசுக்கு அதிக வருவாய ஈட்டித்தரும் டாஸ்மாக் துறையில் பணிபுரியும் தொகுப்பு ஊதிய ஊழியர்கள், உதவியாளர்கள், விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.

பணியாளர்களுக்கு அரசு விடுமுறை அளித்தல், பணி நேரம் மாற்றம், மிகைப்பணி நேரத்துக்கு இரட்டை ஊதியம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. முடிவில், சங்கச் செயலாளர் எஸ்.பி.ஏழுமலை நன்றி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்