திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை: வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் இன்று முதல் திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
எனவே, ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும்.
பழமையான இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களில் வசிப்போர், பாதுகாப்பான கட்டிடங்களுக்கு மாற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கலாம். கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் திசையன்விளை மற்றும் ராதாபுரம் வட்டங் களில் தயார் நிலையில் உள்ளபல்நோக்கு நிவாரண மையங் களுக்கு செல்லலாம்.
மழை பாதிப்புக்கு உதவி தேவைப்படுவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 24 மணிநேரமும் செயல்படும் அவசரகால சேவை மைய தொலைபேசி எண்கள் 0462 2501070 மற்றும் 0462 2500191 -ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும் அந்தந்த பகுதி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம்.
வாட்ஸ் அப் எண்கள்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- 63740 01902, திருநெல்வேலி- 94450 00671,பாளையங்கோட்டை- 94450 00669,மானூர்- 94422 14727, சேரன்மகாதேவி- 97515 01322, அம்பாசமுத்திரம்- 94450 00672, நாங்குநேரி- 90805 89731, ராதாபுரம்- 96777 81680, திசையன்விளை- 99443 06770. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago