திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தமனு விவரம்: தாமிர பரணி நதிக்கரையில் உள்ள கொக்கிரகுளம் பகுதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குடிநீர்சரியாக வரவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால், குடிநீர் குழாய் உடைந்துவிட்டது, குடிநீர் மோட்டார் பழுதாகிவிட்டது என்றுகாரணம் சொல்கின்றனர். திருநெல்வேலி மாநகராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி தாலுகா மூலைக் கரைப்பட்டி பகுதி மக்கள் அளித்த மனுவில், “ மூலைக்கரைப்பட்டி முதல் தெற்குசிங்கனேரி வரை செல்லும் மினி பேருந்தை நாங்குநேரி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையார்குளம் ஊராட்சி கீழப்பிள்ளையார்குளம் கிராம மக்கள் அளித்த மனுவில், “ கீழப்பிள்ளையார்குளம் கிராமத் தில் சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும். தனுஷ்கோடி நகர் பகுதியில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யாமல் உள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்தமிழர் பேரவையின் தூய்மை தொழிலாளர் பேரவையினர் மாவட்டச் செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் அளித்த மனுவில், “திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தூய்மைப் பணியாளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுகிறது. தாக்கு தல்களுக்கு காரணமானவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago