தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் சங்கர். இவர், தனதுநிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து தர விண்ணப்பித்துள்ளார். அதற்கு, கிராம நிர்வாக அலுவலர்ராஜசேகர் (45) என்பவர், ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சங்கர், திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் அறிவுறுத்தலின்படி, லஞ்ச பணத்தைகிராம நிர்வாக அலுவலரிடம் சங்கர் கொடுத்துள்ளார். இதையடுத்து, லஞ்சம் வாங்கிய கிராமநிர்வாக அலுவலர் ராஜசேகரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago