தி.மலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 92 அடியை நெருங்குகிறது.
தி.மலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழையின் தாக்கம் குறைந்துள்ளது. செய்யாறு, செங்கம், ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு பகுதியில் மட்டும் சிறிதளவு மழை பெய்துள்ளது.
அதேநேரத்தில், மாவட்டத்தில் உள்ள 4 அணைகளில் மூன்று அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து நீடிக்கிறது. தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்வதால், சாத்த னூர் அணைக்கு விநாடிக்கு 543 கனஅடி தண்ணீர் வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 92 அடியை நெருங்குகிறது. தற்போது, 91.80 அடியை எட்டியது. அணையில் 2,660 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
இதேபோல், 22.97 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 14.92 அடியாக உள்ளது. அணையில் 46 மில்லி யன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 64 கனஅடி தண்ணீர் வருகிறது. 62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 57 அடியாக தொடர்ந்து 5-வது நாளாக உள்ளது.
அணையில் 233 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago