திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களாக கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை எனக் கூறி, தி.மலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விதித்துள்ளன. அதில், ஒரு கட்டுப்பாடாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டது.
இதற்காக, வெளியூர் பக்தர்கள், தி.மலை நகருக்குள் வருவதற்கு 3 நாட்கள் தடை விதித்தது. நகரைச் சுற்றியுள்ள புறவழிச் சாலையில் 15 இடங் களில் சோதனை சாவடி அமைத்து, வெளியூர்களில் இருந்து வருபவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். அப்படியிருந்தும், கிராமங்கள் பகுதி வழியாக, பலர் தி.மலை நகரத்துக்கு வந்தனர். அவர்களும் மற்றும் உள்ளூர் பக்தர்களும் இணைந்து கடந்த 2 நாட்களாக கிரிவலம் செல்ல முயன்றனர். அவர்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago