ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள தளவாய்பேட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில், வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியனின், 99-வது பிறந்தநாள் விழா நடந்தது. ஈரோடு மாவட்ட உழவர் விவாதக் குழு சார்பில் நடந்த விழாவிற்கு எஸ்.ஏ.ராஜு தலைமை வகித்தார்.
விழாவில், நடப்பு ஆண்டில் சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய பெருமாம்பாளையம் முன்னோடி விவசாயி வி.பெருமாளுக்கு, கரும்பு வளர்ப்போர் சங்க செயலாளர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் பா.அ.சென்னியப்பன் பாராட்டி பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட உழவர் விவாதக் குழு செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி, பெருமாம்பாளையம் உழவர் விவாதக் குழு அமைப்பாளர் பி.எஸ்.பாலசுப்ரமணியம், துணை தலைவர் ஆர்.லோகநாதன், ஆர்.மாரசாமி, பி.செல்லகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், பெருந்தலையூர் அருகேயுள்ள பொன்னாச்சிபுதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடந்த வர்கீஸ் குரியன் பிறந்தநாள் விழாவில், தலைவர் பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் வினோதினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டுறவு சங்கத்திற்கு அதிகபால் ஊற்றிய கே.எம்.சக்திவேல் கலைச்செல்வி ஆகியோரை கூட்டுறவு சங்க தலைவர் பா.அ.சென்னியப்பன் பரிசு வழங்கி பாராட்டினார்.
பால் கூட்டுறவு சங்கம் மற்றும் யு6 பாசனசபை துணைத்தலைவர் ஒ.எஸ்.நந்திவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் பி.பி.ராமசாமி, சிவக்குமார், கிருஷ்ணவேணி மற்றும் குபேந்திரவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago