விழுப்புரம் வட்டம் காணை ஊராட்சிஒன்றியத்திற்கு உட்பட்ட கல்பட்டு ஊராட்சி, விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட துறவி ஊராட்சிக ளில் 'நிவர்' புயல் பாதிப்பினால் ஏரிகளின் நீர்வரத்து வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் மணல் மூட்டைகள் கொண்டு நீர் வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது. இதனை நேற்று பார்வையிட்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அதனை உடனடியாக சரி செய்துஏரிகளில் மழை நீரினை தேக்கிவைக்க வேண்டும் என பொதுப் பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட வி.மாத்தூர் ஊராட்சியில் பம்பை ஆற்றின் குறுக்கே உள்ள வி.மாத்தூர் அணைக்கட்டில் நீர் மட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர் மகேந்திரன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago