கச்சிராயப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் மறியல்

By செய்திப்பிரிவு

குடிநீர் சரிவர விநியோகிக்காத வடக்கனந்தல் பேரூராட்சி நிர்வாகத் தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

வடக்கனந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட அக்காரப்பாளையம் வடக்கு குடியிருப்புப் பகுதிக்கு கோமுகி அணைப் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 7 நாட்களாக சரிவர குடிநீர் விநியோகிக்கவில்லை. அப்பகுதி மக்கள் அருகிலுள்ள விவசாயக் கிணற்றிலிருந்து தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று 10 நிமிடங்கள் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி ஊழியர்களிடம் முறை யிட்டும், அவர்கள் சரியான பதி லேதும் கூறவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அக் காரப்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே, கள்ளக்குறிச்சி-சின்னசேலம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கச்சிராயப்பாளையம் போலீஸார், மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். பேரூராட்சி குடிநீர் விநியோக மேற்பார்வையாளரை அழைத்து போதுமான நேரத்திற்கு குடிநீர் வழங்க உத்தரவாதம் அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதைய டுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்