பசுபதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக யாகசாலை நிகழ்ச்சிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் டிச.4-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கணபதி, லட்சுமி, நவக்ரஹ ஹோமங்கள், தன, கோ பூஜைகள், கிராம சாந்தியுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. கரோனா ஊரடங்கு காரணமாக கோயில்கள் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், யாகசாலை தொடக்க நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நிகழ்வில் இன்று(நவ.30) சாந்தி, திசா, மூர்த்தி ஹோமங்கள், நாளை(டிச.1) பரிவார மூர்த்திகள் யாக சாலை பிரவேசம், பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், நாளை மறுநாள்(டிச.2) விநாயகர் வழி பாடு, டிச.3-ல் அஷ்டபந்தனம் மற் றும் ஸ்வர்ணபந்தனம் சாற்றுதல் ஆகியவை நடைபெற உள்ளன.

தொடர்ந்து, டிச.4-ம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள், மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், டிச.5-ம் தேதி முதல் மண்டலாபிஷேம் நடைபெற உள்ளது.

இதற்கிடையே, இக்கோயில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்தப் பட வேண்டும் என வலியுறுத்தி இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர் அவைத் தலைவர் சித்தரடியார் த.பொன்னுசாமி தலைமையில் நேற்று அக்னிச் சட்டி, பால்குடம், மஞ்சள் குடம் ஏந்தி கோயிலை வலம் வந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்