திருத்துறைப்பூண்டியில் உதயநிதி பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

`விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது, திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தில் உள்ள மறைந்த நெல் ஜெயராமனின் இல்லத்துக் குச் சென்ற அவர், நெல் ஜெய ராமனின் படத்துக்கு மாலை அணி வித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, நெல் ஜெய ராமனின் மனைவி சித்ரா, மகன் சீனிவாசன், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் ஆகியோரிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியபோது, “நெல் ஜெயராமன் விட்டுச் சென்ற பணிகளை தொய்வின்றி தொடர வேண்டும். பாரம்பரிய நெல் சாகுபடி முறைகளைப் பாதுகாக்க வேண்டும். இந்தப் பணி களுக்கு திமுக துணை நிற்கும். இதற்காகவே, இயற்கை முறை விவசாயத்தை பாதுகாக்க திமுகவில் தனியாக அணி தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

பின்னர், திருத்துறைப்பூண்டி யில் உள்ள மறைந்த கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் பி.எஸ்.சீனி வாசராவின் நினைவு மண்டபத்தில், அவரது படத்துக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்தார். தொடர்ந்து, தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் எம்எல்ஏக்கள் பூண்டி கே.கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, ஆடலரசன் மற் றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்