தென்காசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெங்கட்ராமன், மதுக்கூர் ராம லிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் சுகந்தி, மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், “கருப்பாநதி நீர் சேர்ந்தமரம் கிராமத்துக்கு வந்துசேரும் வகையில் மடை திறக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களில் இருந்தும் மாவட்ட தலைநகர் தென்காசிக்கு நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும். மத்திய அரசால் சட்டத்துக்கு புறம்பாக கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும். தென்காசி மாவட்டத்தில் மின் பகிர்மான வட்டம்- மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் உருவாக்க வேண்டும். தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.
செண்பகவல்லி அணையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீர்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதி களுக்கு விரிவுபடுத்த வேண்டும். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும்” உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளராக முத்துபாண்டி யன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக ஜெயராஜ், கணபதி, வேல் மயில், வேல்முருகன், குணசீலன், உச்சிமாகாளி, தங்கம் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் சட்டங்களை கண்டித்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago