மகா தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதியில்லை வேலூரில் இருந்து தி.மலைக்கு 50% பேருந்துகளே இயக்கம்

By செய்திப்பிரிவு

கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி பக்தர்கள் யாரும் தி.மலைக்கு வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டதால், வேலூரில் இருந்து தி.மலைக்கு 50 சதவீத அரசுப் பேருந்துகள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு தி.மலை தீபத் திருவிழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக் கப்படவில்லை. தி.மலையில் மகா தீபம் ஏற்றப்படுவதையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கும், கிரிவலம் செல்லவும் தடை செய் யப்பட்டுள்ளது.

வெளியூர் பக்தர்கள் தி.மலைக்கு வரவேண்டாம் என தி.மலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், வேலூரில் உள்ள பழைய பேருந்து நிலையம் மற்றும் மக்கான் சிக்னல் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகைகள் நேற்று வைக்கப்பட்டிருந்தன.

அதில், ‘‘கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தி.மலை மகா தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 29-ம் தேதி மற்றும் 30-ம் தேதிகளில் தி.மலையில் கிரிவலம் செல்லவும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் தடை விதிக் கப்பட்டது. எனவே, வெளியூர் பக்தர்கள் தீபத் திருவிழாவை காண திருவண்ணாமலைக்கு வரவேண்டாம்’’ என அதில் குறிப் பிடப்பட்டிருந்தது.

வேலூர் - திருவண்ணாமலை இடையே தினசரி 125 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபத் திருவிழாவின் போது மட்டும் வேலூரில் இருந்து 250-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் தி.மலைக்கு இயக்கப்படும்.

இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், சிறப்பு பேருந்துகள் அனைத்தும் நேற்று தடை செய்யப்பட்டிருந்தன. மேலும், வழக்கம்போல இயக்கப்படும் பேருந்துகளை விட குறைந்த அளவில் பேருந்துகளை இயக்க காவல் துறை சார்பில் வேண்டு கோள் விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வேலூர் - தி.மலை இடையே 50 சதவீத பேருந்துகள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன. அந்த பேருந்து களில் காவல் துறையினர் சார்பில் அனுமதி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேருந்துகள் மட்டுமே திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் வரை நேற்று அனுமதிக்கப்பட்டது. இந்த பேருந்துகளில் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டிருந்தது. இதனால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்தும் குறைந்த அளவிலான பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டதாக போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்