புதிதாக வெட்டப்பட்ட வடிகாலில் மழை நீர் தேங்கியதால் பணி பாதிப்பு

By செய்திப்பிரிவு

தொடர் மழையால் குமார பாளையத்தில் புதிதாக வெட்டப்பட்ட வடிகாலில் மழைநீர் தேங்கியதால் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் தொய்வடைந்தது. இதை யடுத்து மின்மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டது.

குமாரபாளையத்தில் ரூ.14 கோடி மதிப்பில் 2 கி.மீ. தூரத்திற்கு வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி குமார பாளையம் - சேலம் சாலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வடிகாலுக்காக தோண்டப் பட்ட பள்ளத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கியது.

இதனால், வடிகால் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து மின் மோட்டார் வைத்து வடிகாலில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டதால் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்ந்து மேற் கொள்ளப்படும், என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்