நீரேற்று நிலையங்களின் பணி கள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் உள்ள தண் ணீரின் அளவு, அவற்றில் எவ் வளவு தண்ணீரை எத்தனை குடிநீர் இணைப்புகளுக்கு பகிர்ந் தளிப்பது, குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு கண்காணிப்பு பணிகளுக்காக ‘ஸ்கேடா’ என்ற தானியங்கி அளவீடு கருவிகள் கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.2.58 கோடி செலவில் அமைக்கப்பட்டன. திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங் கோட்டை, மேலப்பாளையம் மண்டல அலுவலகங்கள், கொண்டாநகரம், சுத்தமல்லி, திருமலைக்கொழுந்துபுரம் நீரேற்று நிலையங்கள், 13 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டன. செயற்கைக்கோள் துணையுடன் இந்த கருவிகள் செயல்படுகின்றன. நீர்த்தேக்க தொட்டி நிறைந்துவிட்டாலோ அல்லது குழாயில் உடைப்பு ஏற்பட்டாலோ மோட்டார் தானாக நின்றுவிடும் வகையில் இந்த கருவியின் செயல்பாடு அமைந்துள்ளது. சமீப காலமாக இந்த கருவிகள் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் வழக்கறிஞர் அ.பிரம்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், ஸ்கேடா கருவிகள் தொடர்பான விவரங்களை கேட்டிருந்தார். அதற்கு மாநகராட்சி நிர்வாகம் அளித்துள்ள பதிலில், கடந்த 10 ஆண்டுகளில் ஸ்கேடா கருவி பராமரிப்புக்கு ரூ.208 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், கருவிகள் செயல்பாட்டில் உள் ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி வாய்ப்பு கிடைக்கும்
வழக்கறிஞர் பிரம்மா கூறும்போது, “4 மண்டல அலுவலகங்களில் தகவல் களை பெறுவதற்காக அமைக்கப் பட்டுள்ள டிஷ் ஆண்டனாக்கள் சேதமடைந்திருக்கின்றன. மாநகராட்சி மைய அலுவலகத்தில் இதுபோன்ற அமைப்பு உள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை. இதனிடையே ஸ்கேடா கருவிகளை பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம் 3 ஆண்டுகளுக்கு ரூ. 60 லட்சம் செலவாகியுள்ளதாக கூறியுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த கருவிகளின் பராமரிப்பு பணிகளில் திருநெல் வேலியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளை நியமித்தால், அவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்” என்றார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago