சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டிஏரிக்கு நேற்று மாலை 6 மணிநிலவரப்படி, 10,254 கனஅடி நீர்வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரியின் நீர் இருப்பு 2,624 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்டம் 33.35 அடியாகவும் உள்ளது.
ஏரியின் பாதுகாப்பு கருதி, நேற்று மாலை 4 மதகுகளில் விநாடிக்கு ஆயிரம் கனஅடி உபரிநீரை, பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரப் பிரிவின் கீழ்பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையாகொசஸ்தலை ஆற்றில் செல்லுமாறு திறந்து விட்டார். இந்நிகழ்வில், கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், திருவள்ளூர் உபகோட்ட உதவி பொறியாளர் கார்த்திகேயன், பூண்டி உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும், ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவைப் பொறுத்து, வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஆட்சியர் பொன்னையா, பூண்டி ஏரியில் உபரிநீர் திறக்கப்படுவதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், உபரிநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் கொசஸ்தலைஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago