புதிய பேருந்து நிலையத்தில் வடியாத மழைநீர் நீரை அகற்ற விழுப்புரம் நகராட்சி மும்முரம்

By செய்திப்பிரிவு

'நிவர்' புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் சராசரியாக 178.23 மில்லி மீட்டர் மழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம் நகரில் 291.50 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் விழுப்புரம் நகரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் வடியாததால் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் நகருக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.

இதுகுறித்து விழுப்புரம் நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த் தியிடம் கேட்டபோது, " விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் இருக்கும் மழை நீர் பேருந்து நிலையத்திற்குள் வருகிறது.

இதனை தடுத்து நிறுத்தி, 100 குதிரை திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீர் வெளி யேற்றப்படுகிறது.

அதன்பின்னர் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மழைநீர் வெளியேற்றப்படும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்