விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘நிவர்’ புயலினால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காராமணி, உளுந்து, வேர்க்கடலை, உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் மற்றும் நெற் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
வாழை, மரவள்ளி மற்றும் மரவகை பயிர்கள் பல இடங்களில் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
இதனை அந்தந்த பகுதி வேளாண் அதிகாரி கள் சரியான முறையில் கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகள் அடுத்து பயிர் செய்யும் வகையில் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பசுமைவீடு அல்லது இந்திரா குடியிருப்பை இந்த ஆண்டே வழங்க வேண்டும்.
வரும் காலங்களில் புயல் மற்றும் பருவகால மழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் மற்றும் ஆறு ஆகியவற்றின் வரத்து வாய்க்கால்களை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago