பவுர்ணமி வழிபாட்டுக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

By செய்திப்பிரிவு

விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில், வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்குள்ள சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், பிரதோஷ நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

இதற்காக அமாவாசை மற்றும் பவுர்ணமியை ஒட்டிய 4 நாட்கள் மட்டுமே சதுரகிரி சென்று வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 29-ம் தேதி பவுர்ணமியையொட்டி நேற்று (27-ம் தேதி) முதல் 30-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழையாலும், தற்போது புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக 29-ம் தேதி மழை பெய்யும் என்பதாலும், அறநி லையத் துறை மற்றும் வனத் துறை சார்பில் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

நேற்று காலை சதுரகிரி செல்வதற்காக வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப் பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்